செஞ்சி மே 2விழுப்புரம்மாவட்டம் செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில் சித்திரை பௌர்ணமி தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதிகாலை 8 மணிக்கு கொடியேற்று விழா, காப்புகட்டுதல்நிகழ்ச்சியும், 108பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. மே 1ஆம் தேதிகாலையில்காலையில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் பால்குடம் ஊர்வலம் தீமிதித்தல் தெப்பல்உற்சவம் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது இதை முன்னிட்டு
காலையில்தடுத்தாண்டிஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தடுத்தாண்டீ ஸ்வரர் மற்றும் தையல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தடுத்தாண்டீஸ்வரர்உடனுறை தையல்நாயகி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியினர். தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுதேர் வடம் பிடிக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்டஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துசாமி தரிசனம் செய்தனர்.
‘தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை அடைந்தது.திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு மற்றும் அனைத்து மகளிர் கூட்டமைப்பு, தமிழன் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கோவில் திருவிழாவில்செஞ்சிகாவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா தையூர்தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில் சித்திரை பௌர்ணமி தேர் திருவிழாவில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!