சுகாதாரமான முறையில் மக்களுக்கு உணவு வழங்கும் முறையை ஊக்கப்படுத்த திட்டம்..
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் தகவல்…
ஈரோடு. ஜூன். 26
தமிழகத்தில் தெருவோரங்களில் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு, வங்கி மூலம் கடன் உதவி பெற்றுத்தந்து, உணவகத்தை மேம்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து சுகாதாரமான உணவு மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் அரசிடம் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தெருவோரங்களில் ஆயிரக்கணக்கான உணவகங்களை, ஏழை மக்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு உரிய வகையில் உணவகங்கள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த தெரு ஓரத்தில் செயல்படும் சிறிய அளவிலான உணவகங்களை, நடத்தி வரும் ஏழை எளிய மக்களும், அந்த உணவகங்களில் சாப்பிடும் பொது மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு கிடைத்திடும் வகையில், இந்தத் தெருவோர உணவகங்களை சுத்தமான, சுகாதாரமான முறையில் நடத்துவதற்கு உதவியாக இந்த தெருவோரக் கடைகளை மேம்படுத்த வங்கிகள் மூலம் கடைகளை நடத்தி வருபவர்களுக்கு வங்கி கடன் வசதி செய்து கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் முதல் கட்டமாக சென்னை திருச்சி மதுரை கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தெருவோரம் நடத்தப்படும் உணவகங்களுக்கு முதற்கட்டமாக வங்கி மூலம் கடன் உதவி வழங்கிட திட்டம் அமைக்கப்பட்டு விரைவில் அது நடைமுறைக்கும் வர உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற்று தெருவோர கடைகளை சுத்தமான முறையில், சுகாதாரத்துடன் கூடிய தடையாக அமைத்தால் அவர்களுக்கும் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், அந்தத் தெருவோர உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்களுக்கும் எந்த ஒரு உடல் ரீதியான உபாதைகள் ஏற்பாடாமல் இருக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்