July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்

தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்

வையம்பட்டி
மருத்துவர் காலனி மக்களுக்கு சாலை வசதி கேட்டு நடத்தினர் :

திருச்சி ஜூலை 13-

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சி புதுவாடி மருத்துவர் காலனிக்கு நாடு சுதந்திரமடைந்து இதுவரை சாலை வசதி
கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பல முறை மனு அழித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆதிக்க சமூகத்தினரின் காலில் விழுந்தால் தான் சாலை வசதி கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது இதை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
இளைஞர் அணி மாநில செயலாளர் துரை குணசேகரன் முன்னிலை வகித்தார் முன்னதாக மாவட்ட செயலாளர் துரைராஜ் அம்பலம் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். பேனருடன் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.