June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா – காத்திருக்கும் பரதம்,ஓவியம்,சிற்ப நிகழ்ச்சி.

சேலம் மண்டல கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் தவில், மிருதங்கம், வயிலின், வாய்ப்பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்க முழுநேர வகுப்புகளில் சேர மாணவ மாணவியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாரம்பரிய கலைகளை மேலும் பரவலாக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சேலத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி:

நடப்பாண்டு தொடக்கத்திலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலைப்பண்பாட்டுத் துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் சங்கரராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜூன் 28 ஆம் தேதியன்று நடைபெறும் பரத நாட்டிய நிகழ்வில் சேலம் அரசு இசைப்பள்ளியில் பயிற்சி பெற்ற முன்னாள் கலைஞர்கள் உள்பட ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அதேநாளில், சிறந்த ஓவியம் மற்றும் சிற்பங்கள் கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பும் கலைஞர்கள் 15 ஆம் தேதிக்குள் படைப்புகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் தளவாப்பட்டியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சேலம் மண்டல கலைப்பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் சங்கரராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்கே நடக்கிறது?

சேலத்தில் முதல் முறையாக இசைப்பள்ளியில் பயின்ற பாரதநாட்டிய துறை மாணவர்கள் ஒன்றிணைந்து, நட்டுவாங்கம் செய்யும் பிரம்மாண்ட பாரதநாட்டிய நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதே போல், 2025-2026 ஆம் ஆண்டிற்கான இசை விழா வரும் 13 ஆம் தேதி ஸ்ரீ பக்த வரபிரசாத ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் சிறப்பு தமிழிசை மற்றும் சிறப்பு புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இதே போல், கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் அரசு பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தப்பாட்டம் சிவப்பாட்டம் கோக்கால் ஆட்ட நாடகம் ஆகிய நாட்டுபுறக் கலைப் பிரிவுகளில் ஓராண்டு பயிற்சியுடன் சான்றிதழ் வழக்கப்படுகிறது பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ள உள்ளதாக கூறினார். இந்த சந்திப்பின் போது, இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் உடனிருந்தனர்.