சங்கராபுரம் டிச 18
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் புற காவல் நிலையம் அமைக்க கோரி பலமுறை புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சங்கராபுரம் காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிலையத்திற்கு சரியான காவலர்களை நியமித்து குற்றங்களை தடுக்க தவறிய விட்டது. அதே சமயம் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக சங்கராபுரத்தில் புற காவல் நிலையம் அமைத்து தொடர்ந்து நடைபெறுகின்ற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க புரட்சி பாரதம் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சங்கராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரம் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து அதிக அளவில் குற்ற செயல்கள் நடைபெறுகிறது அதை தடுக்க இரவு காவலர்களை நியமிக்க வேண்டும் அதே போல சங்கராபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து காவலர்களை நியமிக்க கேட்டுக் கொள்கிறோம்.
சங்கராபுரம் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகிறது. காவல் நிலையத்தில் போதுமான காவலர்களை நிரப்பி சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறுகின்ற குற்ற செயல்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க புரட்சி பாரதம் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஓவியர் பாபு கோரிக்கை.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!