கோவை- டிச:18
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நங்கநல்லூரில், ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் ரூ.39.20 கோடி செலவில் அமையவிருக்கும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு, (டிசம்பர் 16, 2025) மாண்புமிகு தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின்அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நாளொன்றுக்கு சுமார் 400 ஹஜ் புனித பயணிகள் தங்கி, ஓய்வெடுத்து, பயணத்தைத் தொடங்கும் வசதியுடன் கூடிய இந்த ஹஜ் இல்லம், விமான நிலையத்துக்கு மிக அருகில் அமைவதால், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
ஹஜ் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் இந்த மகத்தான திட்டத்திற்கு வழியமைத்த முதல்வர் அவர்களுக்கு, பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், உள்ளம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.
ஹாஜி J. முகமது ரஃபி
தலைவர், பல் சமய நல்லுறவு இயக்கம் தமிழ்நாடு.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம்உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்