கோவை ஜுன்:03
கோவையை சேர்ந்த ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி நடனப்பள்ளி மாணவர்கள் இலங்கை நாடு கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.கோவை இரயில் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்தும் வரவேற்றனர். இது தொடர்பாக அகாடமியின் நிறுவனர் சுபா வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்ட போட்டியில் பங்கேற்றதாகவும்,ஏற்கனவே மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் இலங்கைக்குச் சென்றதாகவும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் படித்து தெரிந்து கொள்ளாமல் அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து பழகுவது அவசியம் அதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் நமது பாரம்பரியமான பரதநாட்டியத்தை அடுத்த நாட்டிற்கு கொண்டு சென்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
ஜூலை மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் குழந்தைகளுக்கு பள்ளி இருப்பதினால் அது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் குழந்தைகள் இதில் நடனமாடியது அனைவரும் கவர்ந்ததாக தெரிவித்தார்.
மத்திய அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் எளிதாக சென்று விட்டதாகவும், குழந்தைகள் மொபைல் ஃபோனில் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!