June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குருபரப்பள்ளியில் வீட்டிற்குள் நுழைந்த கொடிய நாகப்பாம்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி கிராமம் பழைய ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் அருகே பாம்பு சுற்றித் திரிவதை கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பான முறையில் நாகப்பாம்பை பிடித்து அகற்றினர்.
மின்விளக்கு வசதி இல்லாததே காரணம்
இப்பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் விஷப்பாம்புகள் அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனே புதிய மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்
கவியரசு
9900557307