திருச்சி டிச 23:
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு மணப்பாறைபட்டி ரோட்டில் 30 வருடங்களாக குடியிருக்கும்
மக்கள் பயன்படுத்த கூடிய நகராட்சி மினிடேங்க்கில் மீட்டர்பாக்ஸ்,
சுவிட்ச் போர்டு திடிரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் இரண்டு நாட்களாக பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் சம்மவ இடத்தை CPI(ML) கட்சியின் சார்பாக தீப்பிடித்து எரிந்த இடத்தை பொதுமக்களுடன் பார்வையிடபட்டது. உடனே பொதுமக்களுடன் கையெழுத்து பெற்று நகர்மன்ற தலைவர் மற்றும்
நகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து நகர செயலாளர் P.பாலு, 27வது வார்டு கிளை செயலாளர்
A. ஷாஜஹான் ஆகியோர் முறையிட்டனர்.
உடனே நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதுவரை பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக லாரி மூலம் குடிநீர் கொடுப்பதாக உறுதி அளித்து குடிநீர் விநியோகிக்கபட்டது

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்