வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி. எம் .கதிர்ஆனந்த் எம்.பி. முன்னிலையில்
அதிமுக கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி காட்பாடியில் நேற்று (22.12.2025) நடைபெற்றது. அதன்படி
காட்பாடி சட்டமன்றத் தொகுதி வேலூர் மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எஸ்.ஆர்.ராஜசேகர், மற்றும் எம்.அசோக் குமார், கே. லட்சுமணன்,ஆர். தீபக், பி .அருள் பிரகாஷ், எஸ். சிலம்பரசன், கே. நவீன் உள்பட காட்பாடி வடக்கு பகுதியை சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் இளைஞர்கள்
காட்பாடி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வன்னியராஜா தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது, காட்பாடி தொகுதி வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம் .ஆர். பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், கவுன்சிலர் டீட்டா சரவணன், தமிழ்மாறன், மல்லிகேசவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு