June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோக்காடி அருகே பழுதான தார் சாலையை சீரமைக்க அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிருஷ்ணகிரி : சோக்காடியிலிருந்து கிடி வெங்கட்ராமன் கோவில் கொட்டாய் வழியாக ஜம்பத்துக்கு செல்லும் தார் சாலை உள்ளது இங்கு கருங்கல் மேடு என்ற பகுதியில் தார்சாலை குழியும் குண்டுமாக காணப்படுகிறது இதனால் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழ விழுந்து விபத்து ஏற்பட்டு காயங்களுடன் செல்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இந்த வழியாக வர தயங்குகிறார்கள் மேலும் மேலும் அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கும் இந்தக் கரடு முரடான சாலை கடந்து செல்ல கடினமாக இருக்கிறது .எனவே இந்த பழுதான தார் சாலையை சீர் அமைத்து தர வேண்டி சமூக மக்கள் மற்றும் நுகர்வோர் சங்கத்தின் மாநில தலைவர் சி.சிவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307