June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செய்தி வெளியீடு

புதுச்சேரி சிறப்பு ஒலிம்பிக்ஸ் அணியைச் சேர்ந்த 4 ஆண் வீரர்கள், 4 பெண் வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள், 2026 ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக்ஸ் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் அமைந்துள்ள மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போட்டிக்காக புறப்படுகின்றனர்.

இந்த தேசிய அளவிலான தடகள போட்டிகள் 01.02.2026 முதல் 07.02.2026 வரை நடைபெறுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வருகை தரும் சிறப்பு திறன் கொண்ட வீரர்கள் இப்போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

புதுச்சேரி அணியின் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்களுக்கு அனைத்து தரப்பினரின் வாழ்த்துகளும் ஆதரவும்கூடுகின்றன.