கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னபெல்லாரம்பள்ளி கிராமத்தில் உள்ள நீர் நிலை காணாறு முற்றிலும் குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டி நீர் நிலை காட்டாறு துர்நாற்றம் வீசுகிறது . இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் மேலும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது . இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்து பல நாட்கள் ஆகியும் இதுநாள் வரை சரிசெய்ய படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக குப்பை கோழி இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு 9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!