திருப்பூர் -மார்ச்: 17
திருப்பூர் மண்டல விசிக துணை செயலாளராக இருப்பவர் தமிழ்வேந்தன் இவர் மீது 3 பேர் வெவ்வேறு புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்படி. கோவை குனியமுத்தூரை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்பவரது கணவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு சொந்தமாக திருப்பூரில் உள்ள 70 சென்ட் நிலம் மற்றும் அதில் உள்ள 3 வீடுகளையும் போலியான நபரை பயன்படுத்தி கிரையம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தமிழ்வேந்தனை வெளியேற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சொத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் இது தொடர்பாக தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அகிலாண்டேஸ்வரி புகார் அளித்தார். அதே போல் பூமலூரை சேர்ந்த ரெங்கசாமி(58) என்பவருக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில் 23, 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது அடமான இடத்தை மீட்பது தொடர்பாக உதவிக்கு என வந்த தமிழ்வேந்தன் தனது மனைவியிடம் பேசி அழைத்துச் சென்று விட்டதாகவும் தனது மனைவியை தன்னுடன் வாழ விடாமல் தடுப்பதாகவும் மேலும் மனைவியை தேடிச் சென்றால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ரெங்கசாமியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதே போல் திருப்பூர் சுகுமார் நகர் பகுதியை சேர்ந்த அய்யம்மாள் என்பவரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி பல தவணையாக 3 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு நிலம் கிரையம் செய்து தராமலும் பணத்தையும் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். திருப்பூர் மண்டல விசிக துணை செயலாளர் தமிழ் வேந்தன் மீது ஒரே நேரத்தில் 3 பேர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்வேந்தனிடம் கேட்ட போது நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் ரெங்கசாமி மனைவி அலமேலுவை தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!