வந்தவாசி, ஜூலை 19::
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் விருது வழங்கும் விழா பாலாம்பாள் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.அப்பாண்டைராஜன் முன்னிலை வகித்தார். கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மேனான் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார் பங்கேற்று, ‘காமராஜரின் பண்பு நலன்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் புலவர் மா.மங்கையர்க்கரசி அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கவிஞர் மா.கதிரொளி, எக்ஸ்னோரா மலர் சாதிக், சமூக ஆர்வலர் வி.விஜயகுமார், பூங்குயில் சிவக்குமார், தலைமை ஆசிரியர் க.வாசு, கவிஞர் வந்தை குமரன், பட்டதாரி ஆசிரியர் சக்ரவர்த்தி, ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் கு.சதானந்தன், தமிழாசிரியர் கபிலன், ஓய்வுபெற்ற டிஇஓ பிஏ ஜெயக்கண்ணு, இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் அருள் முருகன், பட்டதாரி ஆசிரியர் ம.ரகுபாரதி, ரெட் கிராஸ் உறுப்பினர் அ.ஷாகுல் அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் காமராஜர் பற்றிய பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் காமராஜர் விருது பெற்ற புலவர் மா.மங்கையர்க்கரசி ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வை கணினி ஆசிரியர் ப.சுரேஷ் தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்