July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூர்.

காஞ்சி பீடத்தின்
ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20-ம் தேதி திருப்பூர் விஜயம்.

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று
பக்தர்களுக்குஅருளாசி .

உலக அமைதி, நல்ல மழை வளம் வேண்டி
121 வேத விற்பன்னர்களால் 1331 முறை ஜெபிக்கப்படும் மகாருத்ர யாகம் –

ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலம்நாயா சர்வஜ்ஞ பீடத்தின் 70வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருப்பூருக்கு வருகிற 20 ஆம் தேதிவிஜயம் செய்கிறார்.இவர் பாலக்காட்டில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் பல்லடம் ரோடு வாய்க்கால் தோட்டம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்திற்கு வருகை தருகிறார்,
இதுகுறித்து 24 மணி தெலுங்கு செட்டியார்கள் கல்யாண மண்டபம் அறக்கட்டளை, ,சுலோச்சனா குழுமம் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார் மற்றும் ராமகிருஷ்ண பஜனை மடம் திருப்பூர் கிளை நிர்வாகிகள் கூட்டாக ஷெரிஃப் காலனியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

வருகிற 20 ஆம் தேதி
ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலம்நாயா சர்வஜ்ஞ பீடத்தின் 70வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருப்பூருக்கு விஜயம் செய்கிறார்.சுவாமிகள் பாலக்காட்டில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருகிறார். ஆலயத்தில் பூர்ண கும்பம் மரியாதை வழங்கப்படுகிறது அன்று இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார் அதனைத் தொடர்ந்து 21 ஆம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கும், காலை ஒன்பது முப்பது மணி முதல் 12 மணி வரை வேத பாராயணமும் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் தொழில் துறையினருக்கு சுவாமிகள் அருளாசி வழங்குகின்றார் அதனைத் தொடர்ந்து வருகிற 22ஆம் தேதி காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் அன்று ஸ்ரீ
லலிதா சகஸ்ர நாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று
பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்,பின்னர் அன்று மாலை இரண்டு மணி அளவில் சேலம் புறப்பட்டு செல்கிறார்,
அதனைத் தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் உலக அமைதி நல்ல மழை சுபிட்சம் ஆரோக்கியம் கல்வி முன்னேற்றம் குடும்ப நலன் மற்றும் பாரத தேசத்தின் ஆன்மீக உயர்வுக்காக மகா ருத்ர யாகம் 121 வேத விற்பன்னர்களால் 1331 முறை ஜெபிக்கப்பட்டு பூர்ணாகுதியும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சன்னதியில் நடைபெற உள்ளது.