June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்2026-ம் ஆண்டு குரூப் I முதனிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புதுவக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.

கள்ளக்குறிச்சி ஜீன் 04

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய / மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்று மத்திய அரசின் எல்லை
பாதுக்காப்பு படை, மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம்,
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நில அளவைத்துறை, கருவூலத்துறை, நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை, புள்ளியியல்துறை மற்றும் காவல்துறை
போன்ற துறைகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ம் ஆண்டு திட்ட நிரலில் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு ஜுன் மாத இறுதியிலும் இதற்கான முதனிலை தேர்வு
06.09.2026 அன்றும், குரூப் II தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்திலும் இதற்கான தேர்வு 25.10.2026 அன்றும், குரூப் IV தேர்விற்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்திலும்
இதற்கான தேர்வு 20.12.2026 அன்றும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, டி.என்.பி.எஸ்.சி. ஆண்டுத் திட்ட நிரலில் தெரிவித்த குரூப் 1 முதனிலை
தேர்விற்கு பிரத்யேகமாகவும், குரூப் II / IV தேர்விற்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகளும் தனித்தனியாக மாதிரித்தேர்வுகளும் வருகின்ற 12.06.2026 வெள்ளிக்கிழமை
அன்று காலை 10.00 மணி முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு
04151 -295422 / 245246 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இத்தேர்விற்கு
தயாராகும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளார்.