June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி செக்கோவர் நிறுவனத்தின் எஸ் டி சி ஆர் திட்டத்தின் சார்பில் குழந்தைகள் குழுவிற்கு மூன்று நாள் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் நிறுவனத்தின் எஸ்.டி.சி.ஆர் திட்டத்தின் சார்பில் குழந்தைகள் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செக்கோவர் நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அனையேரிதலைமை ஆசிரியர் எட்வின் கிராம நிர்வாக அலுவலர் பார்வேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில்
அனையேறி, கவரை, காரை, மேல் பாப்பம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றால், தடாகம், செவலப்புரை, ஆலம் பூண்டி தையூர் ஆகிய 9 சேவை கிராமங்களில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது இதில்குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது பயிற்சி நிறைவு நாளான இன்று குழந்தைகள் குழு உறுப்பினர்கள் கிராமக் குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுப்பினர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினர் அதில் கிரிக்கெட் மட்டை பால் வாலிபால் புட்பால் ரிங் பால் பேட்மிட்டன் ஸ்கிப்பிங் ரோப் கேரம்போர்டு செஸ் மற்றும் பிற விளையாட்டு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் செக்கோவர் அலுவலர்கள் சுரேஷ் பாபு, விஜயரங்கன் , ஜெயசீலன் ,சூர்யா, அரசு, சக்திவேல் ,சங்கீதா, சிவானந்தம், குலசேகர், கவியரசு ஞானம், கோடீஸ்வரி, அரவிந்தன், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்