கள்ளக்குறிச்சி ஆகஸ்ட் 01
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம்
03.08.2026, 04.08.2026 மற்றும் 05.08.2026 ஆகிய தேதிகளில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி வட்டம் 9 ஏரிகள் (குரூர்,
முடியனூர், நாகலூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம்,
சிறுவாங்கூர்,) திருக்கோவிலூர் வட்டம் 7 ஏரிகள் (மாடம்பூண்டி, ஆவிகொளப்பாக்கம், எடையூர், எல்ராம்பட்டு, முதலூர், தகடி, திருப்பாலப்பந்தல்)
சங்கராபுரம் வட்டம் 2 ஏரிகள்
(மஞ்சப்புத்தூர், தண்டலை) வாணபுரம் வட்டம் 12 ஏரிகள் (அரியலூர், அத்தியூர்,
சித்தப்பட்டிணம், கடம்பூர், கடுவனூர், பாசார், பாக்கம், பல்லகச்சேரி, பாவந்தூர்,
ரிஷிவந்தியம், திருவரங்கம், வாணாபுரம்,)
உளுந்தூர்பேட்டை வட்டம் 17 ஏரிகள் (நகர், ஆத்தூர்பெரியஏரி, அலங்கிரி, அரளி, ஆசனூர், காட்டுநெமிலி, ஏ.புத்தூர், குஞ்சரம், மேட்டத்தூர், பு.கிள்ளனூர், செம்பியன்மாதேவி, செங்குறிச்சி, உடையானத்தம், உதுப்பூர், மடப்பட்டு, காட்டுஎடையார்,
பாலி) ஆகிய 47 ஏரிகள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு
ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56A, தாட்கோ வளாகம், விழுப்புரம் 605602
fishermenwelfarevpm@gmail.com என்ற இணையதளத்திலும், 04146-259329 விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளார்.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை