தனியார் பஸ்சை சிறைபிடித்த மாநகராட்சி அதிகாரிகள்
மின் கம்பத்தை சேதப்படுத்தியதால் நடவடிக்கை :
திருச்சி ஜூலை 31 –

திருச்சி திருவரங்கத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் திருவரங்கம் பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் நிலையத்துக்குள் இருந்த மின்கம்பத்தில் அந்த பஸ் எதிர்பாராதமாக மோதியது. இதில் மின் கம்ப மேடை மற்றும் எல்இடி விளக்கு நொறுங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ் வழக்கம் போல் மீண்டும் பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு பயணிகளுடன் புறப்பட்டது.
இது பற்றி அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தனியார் பஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இழப்பீடு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை அதே பஸ் திருவரங்கம் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றுக்கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த மாநகராட்சி ஊழியர் உடனடியாக
மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெயக்குமார்க்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களுடன் விபத்தை ஏற்படுத்தி இழப்பீடு வழங்காத அந்த தனியார் பஸ்சை ஜெயக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்த னர். பயணிகளுடன் பஞ்சப்பூர் நோக்கி புறப்பட்ட அந்த பஸ்ஸை பஸ் நிலையத்துக்கு வெளியே அவர்கள் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அதற்கு தனியார் பஸ் டிரைவர்,
கண்டக்டர் ஆகியோர் ஏன் பஸ்சை நிறுத்தினீர்கள் என்று கேட்னர். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள்
இழப்பீடு வழங்கிய பின்னர் தான் பஸ்சை இயக்க வேண்டும் என உறுதிப்பட தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு மாநகராட்சி ஊழியர்கள் பஸ்ஸை சிறை பிடித்தனர் பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டது தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பஸ்ஸை சிறை பிடித்ததை விடுவித்தனர்.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காகித மடிப்பு கலைகள் பயிற்சி…!