உளுந்தூர்பேட்டை டிச 21
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை உளுந்தூர்பேட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் வருகின்ற 27/12/25 அன்று அடிக்கல் நாட்ட உள்ளார். ஆகவே புதியதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபெருமான் மற்றும் மாவட்ட தலைவர் பொன்னரங்கம் ஆகியோர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி அவர்களிடம் மனு அளித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து விரைவில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்