வந்தவாசி, டிச 21:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தேசிய மின் சிக்கன வாரவிழா முன்னிட்டு மின்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கோட்ட செயற்பொறியாளர் சரவண தங்கம் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் நாராயணன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக,ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், திமுக கழக நகர செயலாளர் தயாளன்,ஒன்றிய செயலாளர் ஆரியாத்தூர் பெருமாள் உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் மின் சிக்கனம் தேவை இக்கணம் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலமானது கோட்டை மூலை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றது. பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்