June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…

காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே ஏற்பாடுகள் தீவிரம்…

ஈரோடு. டிச. 18

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று. நடைபெறுகிறது. காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

திரைப்பட நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை, வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

அவர் மாநாடு பொதுக்கூட்டம் என்று நடத்திய நிலையில், அவர் கலந்து கொண்ட கரூர் வேலுசாமிபுரம் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் கடுமையாக அப்சட்டான விஜய் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு கட்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.

75 நாட்களுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கிய அவர் இம்மாதம் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி களத்தில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை அழைத்து வந்து ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அதன்படி அந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் என்பது இன்றே டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அடுத்துள்ள சரளை என்ற இடத்தில் இன்று நடைபெறுகிறது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் தனது சொந்த மாவட்டத்தில் தன்னுடைய பலத்தை மற்றும் தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில் இன்றைய விஜயின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகமும், வட்ட காவல் துறையும் இன்று நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளை விதித்துள்ளது. காவல்துறையின் நிபதனைகள் மீறப்பட்டு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் சூழல் ஏற்பட்டால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களே முழு பொறுப்பு என்று காவல்துறை தனவே நிபந்தனைகளில் முக்கியமான நிபந்தனையாக இதை தெரிவித்துள்ளது.

மேலும் கூட்டத்திற்கு சுமார் 2000 பெண்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் மற்றும் கம்பங்களில் சுருள் கம்பி சுற்றுள்ளது.

மேலும் மருத்துவத் தேவைக்காக 72 மருத்துவர்கள் மற்றும் 120 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவும் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதோடு சுமார் 200க்கும் மேற்பட்ட பவுன்சர்களின் பாதுகாப்பும் கட்சி சார்பில் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஈரோட்டில் நடைபெறும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.