வந்தவாசி, டிச 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தெருநாய்களிடம் இருந்து எவ்வாறு தற்காப்பது, நேர மேலாண்மை, பாலின சமத்துவ விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சுமதி, மோகனவள்ளி, பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை தலைவர் எழில் வசந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, வழூர் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் அருண்குமார், வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வேலாயுதம் ஆகியோர் பங்கேற்று, தெரு நாய்களிடம் எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்வது, நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், உடல், மனம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களையும் வழங்கினர். உடல் ஆரோக்கியமும் சரி விகித உணவு பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இறுதியில் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் மணி முருகன் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்