June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு சுற்றுப்பயணம்..

பல்வேறு திட்டப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..

ஈரோடு. டிச. 12

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேற்று பல்வேறு திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் எஸ். காந்தி ராஜன் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்பொழுது மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் முதலில் ஈரோடு அருகே உள்ள சோலாரில் 74. 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்களின் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, சோலார் புதிய பேருந்து நிலையத்தை நேரில் பார்வைக்கு ஆய்வு செய்து பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் சோலார் புதிய பேருந்து நிலையத்தில் வுட் கட்டமைப்பு வசதிகள், பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதனையும் ஆய்வு செய்தனர், மேலும் அவர்களுக்கான தங்கும் வசதி குடிநீர் மற்றும் கழிவறைகள் வசதி செய்யப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தனர். தூய்மை பணியாளர்களின் பணிகள் குறித்தும், அவர்களின் வருகை பதிவேடுகளையும் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நெடுஞ்சாலை துறையின் சார்பில் 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு முதல் தாராபுரம் சாலையில்,, 14/4 மற்றும்15/8 கிலோமீட்டர் ஓடுதளம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.

சாலையின் தரம் மற்றும் நீளம் அகலம், தடிமன் ஆகியவற்றை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விளக்கம் கேட்டனர்.

மேலும் சென்னிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலைப்பாதை திட்டத்தின் கீழ் 6.70 கோடி மதிப்பீட்டில் 3.900 கிலோமீட்டர் மலைப்பாதை அமைக்கப்பட்டதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், அந்த மலைப்பாதை பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பெருந்துறை கூட்டுறவு துறை சார்பில் செயல்படுத்தப்படும் கொப்பரை தேங்காய் ஏல மையம் மற்றும் பசுமை சமையல் எண்ணெய் ஆலையையும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர், விவசாய பெருங்குடி மக்களையும் சந்தித்து உரையாடி குறைகளை கேட்டறிந்தனர்.

முன்னதாக 35 பயனாளிகளுக்கு 74.74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நல திட்ட உதவிகள் மதிப்பீட்டு குழுவினரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்தி ராஜன் தலைமையில், மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இராம. கரு மாணிக்கம் ( திருவாடனை தொகுதி திருவாடனை ) எஸ் பி வெங்கடேசன் ( தர்மபுரி தொகுதி) மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்தி ராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து மதிப்பீட்டு குழுவினர் ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடத்தினர்.