June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – இரண்டு வயது மகனை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் மூழ்கி உயிரிழந்த தாய்…

ஏரிக்கரையில் அழுது துடித்த ஆறு வயது மகன்…

இறப்புக்கு முன் குழந்தைகளுடன் கடைசி புகைப்படமாக செல்பி எடுத்து தனது கடைசி புகைப்படம் என்று பேஸ்புக்கில் பதிவிட்டு தனது இறப்புக்கு காரணம் என பதிவிட்ட நபரின் புகைப்படத்தை பதிவிட்ட பெண்

அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவருக்கு பாண்டிலெட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாண்டிலெட்சுமியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஓட்ட கோவிலுக்கு வந்து கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பாண்டிலட்சுமி திருப்பூரில் தங்கி தனது பியுட்டீசியன் பணியை தொடர்ந்து செய்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, பாண்டிலட்சுமிக்கு திருப்பூரில் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கணவர் ரகுபதிக்கும் மனைவி பாண்டிலெட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனது மகன்கள் லோகேஷ் மற்றும் கமலேஷ் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து பாக்யலட்சுமி, ஓட்டகோவிலுக்கு சென்றுள்ளார் செல்லும் வழியில் உள்ள அம்பலவார்கட்டளை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில். பெரிய மகன் லோகேஷை கரையில் உட்கார வைத்து விட்டு, தனது இளைய மகன் கமலேஷை தனது துப்பட்டாவால் தனது இடுப்பில் கட்டிக்கொண்டு, ஏரியில் மூழ்கியுள்ளார்.
நீண்ட நேரம் ஏரிக்கரையில் லோகேஷ் தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்த அம்பலவார்க் கட்டளை கிராமத்து மக்கள் விசாரித்த பொழுது, தனது தாய் தனது தம்பியுடன் ஏரியில் இறங்கி விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பலவர் கட்டளை கிராமத்து மக்கள் ஏரியில் குதித்து உயிரிழந்த நிலையில் தாய் பாண்டிலெட்சுமி மற்றும் மகன் கமலேஷ் ஆகிய இருவரையும் மீட்டனர்.

மேலும் தரையில் அமர்ந்திருந்த மூத்த மகன் லோகேஷ் கையில், பாண்டிலட்சுமி செல்போன் இருந்துள்ளது. அதை எடுத்து பார்த்த பொழுது,
தனது இரு குழந்தைகளுடன் செல்பி எடுத்து, இதுதான் எனது கடைசி புகைப்படம் என்றும், தனது சாவுக்கு காரணம் இவர்தான் என்று திருப்பூரில் தான் பழகிய நபரின் படத்தையும் பதிவிட்டு, அதை பேஸ்புக்கில் ஏற்றிவிட்டு பாண்டிலட்சுமி தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்த பாண்டிலெட்சுமி மற்றும் கமலேஷ் ஆகியோரின் வாயில் நுரை தள்ளி உள்ளதால், ஏரியில் மூழ்கி இறப்பதற்கு முன் விஷம் அருந்தி உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து அறிந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிலெட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த பாண்டிலட்சுமியின் கணவர் ரகுபதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வயது குழந்தையுடன் ஏரியில் முழுகி தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது