புதுச்சேரி:
நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் வீரத்துடன் பணியாற்றி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை (BSF) கமாண்டோ கோகுலபிரசாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


துணிச்சலுக்கான அங்கீகாரம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தனது அசாத்திய திறமையையும், வீரத்தையும் வெளிப்படுத்திய கோகுலபிரசாந்தை கௌரவிக்கும் விதமாக, எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் அவருக்கு ‘சிறந்த வீரர்’ (Brave Soldier) பதக்கமும், ‘கமிமாண்டன்ட் பாராட்டுச் சான்றிதழும்’ (Commandant Commendation Certificate) வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நேரில் சென்று கௌரவிப்பு
இந்த செய்தி அறிந்து பெருமிதமடைந்த ரெட்டியார்பாளையம் தொகுதி வழக்கறிஞர் சசிபாலன் அவர்கள், புதுநகர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள கமாண்டோ கோகுலபிரசாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார். நாட்டின் எல்லையைக் காக்கும் ஒரு வீரர் தனது தொகுதியைச் சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், கோகுலபிரசாந்திற்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகளை வழங்கி மரியாதை நிமித்தமாக கௌரவப்படுத்தினார்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது, வழக்கறிஞர் சசிபாலன் பாசறையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர். ஒரு சாமானிய இளைஞன் ராணுவத்தில் உயரிய விருது பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.