கோவை -ஜன:06
பூமி அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை ராணா சங்கர் – எம்.கே.எஸ் மருது ஆகியோர் துவங்கியுள்ளனர்.
இந்த துவக்க விழாவின் ஒரு பகுதியாக கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளை அறக்கட்டளையின் நிறுவனர்கள் துவக்கி வைத்தனர்.தமிழகம் முழுவதும் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் பரிசாக 10000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5000, ரூபாயும், மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.மேலும் அறக்கட்டளை குறித்து நிறுவனர்கள் பேசுகையில், மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்து அறக்கட்டளையை இயக்கப் போவதாக கூறினார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள், ஆதரவற்றவர்கள், ஏழ்மையான நிலையில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் ஆகியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சமூக மாற்றத்திற்காக எங்களது அறக்கட்டளை செயல்படும் என்று கூறினர்.மேலும் இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் இந்த போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனர். இந்த போட்டியானது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் அமைந்துள்ளது என்று கூறினர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..