அரியலூர் மாவட்டம் கோவிலூர் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் கோவிலூர் ஊராட்சியில் இவ்வருடத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் புகார் அளித்தம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்ததன் அடிப்படையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது இதற்கு காரணமான ஊராட்சி செயலாளர், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிதலப் பொறுப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் – 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!