அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித மன்றம் சார்பில் தேசிய கணித தின கொண்டாடப் பட்டது . அப்போது பேசிய பள்ளி தலைமை முனைவர் சின்னதுரை ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்து வரை சிறந்த கணித மேதையாக உருவாகிய ராமானுஜன் அவர்களின் பிறந்தநாளை தேசிய கணித தினமாக கொண்டாடுகின்றோம்.
குறைந்த காலமே உயிர் வாழ்ந்தாலும் கணிதத்தில் அவர் கண்டுபிடித்த சமன்பாடுகள் இன்றும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது .
இன்று ஏ.டி எம்.ல் பணம் எடுத்தல் .பார் கோட் . ஸ்கேனர் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றிற்கு ராமானுஜன் அவர்களின் கண்டுபிடிப்பு அடிப்படையாக உள்ளது .
எனவே பள்ளி மாணவர்கள் கணிதத்தை விரும்பி கற்க வேண்டும் கணித பாடத்தில் சிறந்து விளங்கினால் அனைத்து பாடங்களையும் நன்றாக படிக்க முடியும் . வாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களையும் எளிதில் தீர்க்க முடியும் .
கணிதம் இல்லாத கல்வியே இல்லை. எனவே கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் கணிதத்தை விரும்பி படிக்க வேண்டும். அதோடு புரிந்து படிக்க வேண்டும் என்றார்.
கணித மன்ற பொறுப்பாசிரியர் ஆசிரியர் செந்தமிழ் செல்வி வரவேற்றார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு புதிர் கணக்குகளும் சிந்தனைகளை தூண்டி வைக்கும் கணக்குகளும் செய்து விளக்கம் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன் வெங்கடேசன் அந்தோணி டேவிட் ஆய்வக உதவியாளர் மணிகண்டன் அபிராமி பயிற்சி ஆசிரியர்கள் காஞ்சனா .கார்த்திகா. மேற்கொண்டனர் நிறைவாக கணித ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்