விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்கள் சமீபகாலமாக சமூக பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தீபாவளி நேரத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பொங்கல் நேரத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு மருத்துவமனை வளாகம் தூய்மை பணி மேற்கொள்ளுதல்.
விழா காலங்களில் செஞ்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவில்களில் அன்னதான பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை பாராட்டும் விதமாக மாணவர்களின் சேவையை பாராட்டி ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற ராமசாமி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம் அவர்கள் பதக்கம் பாராட்டு சான்றிதழ் தன்னுடைய செலவில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கினார்.
ஒருங்கிணைப்பு பணியினை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஏழுமலை மேற்கொண்டார்.
செஞ்சி பி ஏரிக்கரை ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய நிர்வாகிகளும் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூட வியாபாரிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்