June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நைட் ஷோ சென்ற பெண்

இந்நிலையில், சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியில் தங்கியிருந்த 34 வயது பாரதி மரணம் மர்மமான திருப்பத்தை எடுத்து வருகிறது…

பிஇ படித்தவர் பாரதி.. 34 வயதாகிறது.. திருமணமாகாதவர். இவரது அப்பா டெல்லி ஆறுமுகம்… இவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிஇ பட்டதாரியான பாரதி, சங்கர் நகர் பகுதியில் டியூஷன் சென்டரில் பணியாற்றியும், அங்கேயும் தங்கியும் வந்தார்.

பாரதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த 49 வயது உதயசரண். தனியார் மருத்துவமனையில் உயர்நிலை பொறுப்பில் இருக்கிறார் உதயசரண்.. சம்பவத்தன்று இரவு பாரதியுடன் நைட் ஷோக்கு சென்றிருந்தார்… அதன் பிறகு பாரதி தங்கிய ரூமுக்கு இருவருமே வந்துள்ளனர்.. அந்த ரூமிலேயே உதய சரணும் தங்கியிருக்கிறார்..

சிகரெட் பிடித்த பாரதி

அப்போது பாரதி சிகரெட் பிடித்தபடி மயங்கிவிட்டாராம். உடனடியாக உதயசரண் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு பாரதியை தூக்கி சென்றுள்ளார்.. ஆனால், பாரதி இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்..

சிகரெட் பிடித்தபடி பாரதி எப்படி இறந்திருக்க முடியும் என்று, பாரதியின் உறவினர்களுக்கு சந்தேகம் கிளம்பியது.. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டு அரசு மருத்துவமனையின் முன் போராட்டம் நடத்தினர்.

மூக்கில் ரத்தம், நெஞ்சில் வீக்கம்

இப்படிப்பட்ட நேரத்தில்தான், பாரதியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், பாரதியின் மூக்கில் ரத்த காயமும், நெஞ்சில் வீக்கமும் இருப்பது தெரியவந்தது.. மேலும் இதனால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.. இந்த ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த போலீஸ், இது சாதாரண மரணம் கிடையாது, என்பதை அறிந்து, உதயசரணை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது உதயசரண் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதாவது அதாவது, பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது… பாரதி மது, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் உடையவராம்..

ரூமில் என்ன நடந்தது

சம்பவத்தன்று, சினிமாவுக்கு சென்றுவிட்டு ரூமுக்கு திரும்பியதுமே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் தாக்கியதாகவும் அதில் பாரதி இறந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்..

திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தொடர்ந்து பாரதி அழுத்தம் கொடுத்ததால் கோபத்தில் உதயசரண் அடித்திருக்கலாம் எனும் கோணத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. மரணத்தின் காரணம் தெளிவாக வெளிவர, போலீசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது சேலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.