விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதி காலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின் பல வண்ண மலர்கள் பட்டாடை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நெடு வரிசையில் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
அதன் பின் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் விளக்கு பூஜை விழா மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு ஐப்பசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து அங்காளம்மனை வழிபாடு செய்தனர்.
நாடு நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் உதவி ஆணையர் சக்திவேல் அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை அறங்காவலர்கள் சுரேஷ் மதி அழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு மற்றும் சந்தானம் பூசாரி மற்றும் திருக்கோவில் மேலாளர் சதீஷ் காசாளர் மணி மணியம் குமாரர் உள்ளிட்ட பூசாரிகள் கலந்து கொண்டனர்

More Stories
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்
வந்தவாசி கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள்..!
கௌமார மடாலய சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா&முப்பெரும் விழா