வந்தவாசி, ஜன 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ருக்குமாயி தாயார் கோவிலில் நேற்று தைத்திருநாளை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பாகவத கோஷ்டிகள் பங்கேற்ற நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு