புதுச்சேரி:
150-ஆவது வந்தே மாதரம் விழாவை முன்னிட்டு, புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7, 2025) பள்ளி மாணவர்களின் தேசபக்திப் பாடல் முழக்கத்துடன் கோலாகலமான விழா நடைபெற்றது.
இந்த விழாவானது, எஸ்.பி. சௌத் செல்வம் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. முதலியார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், எஸ்.ஐ. அலாவுதீன் மற்றும் எஸ் ஐ ஜெயபிரகாஷ் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் இந்த தேசபக்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய அம்சமாக, பள்ளி மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடி, தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தச் சிறப்புமிக்க விழாவில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, வந்தே மாதரம் பாடலின் வரலாற்றையும், தேசப்பற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் அமைந்தது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.