சங்கராபுரம் நவ 04
அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கள்ளக்குறிச்சி தனியார் கல்லூரியில் பயிலும் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்ந்த மாணவர் சக்தி 60 – 65 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு எதிர் எதிர்த்து விளையாடிய மூன்று போட்டியாளர்களையும் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் ஹரியானாவில் நடக்கவிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் கடின பயிற்சி மூலம் இந்த சாதனையை இவர் அடைந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கி வரும் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பயிற்சியாளர் சூரியமூர்த்தி தான் இவரின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..