துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்.
அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
ஈரோடு. நவ. 23
ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நேற்று நடைபெற்ற, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் சு. முத்துசாமி பரிசுகளை வழங்கினார்.
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாள் விழா வருகின்ற 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு ஆணைகள் மற்றும் அமைப்புகள் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு.
தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்த பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று ஈரோடு மல்லிகை அரங்கத்தில் மாணவ மாணவிகளுக்கான, மாநில அளவிலான சதுரங்கப் போட்டி, ஓவிய போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியை தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சு. முத்துசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார், துணை மேயர் வி. செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், திமுக இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் சு. முத்துசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் மதியம் அறுசுவையுடன் உணவுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு கானா ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

More Stories
பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.