கள்ளக்குறிச்சி நவ 13
22 வது ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி – 2025 & 5 வது ஆல் இந்தியா ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி – 2025 மத்தியபிரதேச மாநிலம் ரேவாவில் நடைபெற்றது.
இதில் டெல்லி, ஹரியானா,சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கள்ளக்குறிச்சி கயிறு தாண்டுதல் சங்க மாணவ, மாணவிகள் 18 பேர் உட்பட தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்க மாணவ மாணவிகள் 23 பேர் கலந்து கொண்டனர்.
U-11,U-14,U-18 என வெவ்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி மொத்தம் 21 தங்கப்பதக்கமும், 13 வெள்ளிப் பதக்கமும்,12 வெண்கல பதக்கமும் ஆக மொத்தம் 46 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்து தமிழ்நாட்டிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்க செயலாளர் சுகுமாறன் வெகுவாக பாராட்டினார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்க தலைவர் குசேலன் மற்றும் பெற்றோர்களும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். உடன் பயிற்சியாளர் சூரியமூர்த்தி இருந்தார்.

More Stories
செய்தி வெளியீடு
நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழாநாகர்கோவில்: இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில்முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா”இது நம்ம ஆட்டம் 2026″ ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.இரத்தினசாமி, துவக்கி வைத்தார்.