கன்னியாகுமரி மாவட்டம் சாந்தபுரத்தில் உள்ள ராம் பேட்மிண்டன் அகாடமியில்,இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பயிற்சியாளர் கியோஷி கராத்தே ஜெயகர்ணன் தலைமை தாங்கினார். தக்கலை தேவி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி. தேவி மற்றும் பெத்தெல்புரம் நட்புகள் இயக்கத் தலைவர் திரு. பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்வின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு கட்டா (Kata) மற்றும் குமித்தே (Kumite) தேர்வுகள் நடத்தப்பட்டன. இது தவிர, மாணவர்களின் உடல் வலிமையையும் மன ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக யோகா மற்றும் சிலம்பம் தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு அவர்களது அடுத்த நிலையை குறிக்கும் கராத்தே பெல்ட்கள் (Belts) மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் சஞ்சய், ஜிஜோ, மற்றும் சமூக சேவகர் குளச்சல் முகமது சபீர், அபுலன், நவஜோதி மற்றும் தேவி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவ-மாணவியரின் திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..