வந்தவாசி, நவ 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. எஸ்எம்சி தலைவர் தமிழ்ச் செல்வி, கல்வியாளர் பொன்.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் துர்காதேவி வரவேற்றார். மேலும் பள்ளி செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் இயங்காத நிலையில் உள்ள மின்சாதன பொருட்களான தொலைக்காட்சி, லேப்டாப் உள்ளிட்டவைகளை தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் உதவி ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்