வந்தவாசி, நவ 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் கருத்தரங்கம் மற்றும் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை வினோதினி (பொறுப்பு) தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை தமிழ் இலக்கியா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.மங்கையர்க்கரசி பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் போக்சோ விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சாந்தி, செல்போன் தாக்கத்தால் மாணவிகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக பேசினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியை ஜெயபாரதி நன்றி கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்