June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு

ஈரோடு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ப. கந்தவேல், சி. ஜெகநாதன், எஸ் ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அருகில் அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி சந்திரகுமார் ஆகியோர் உள்ளனர்.

முதல்வரிடம் எம் எல் ஏ கோரிக்கை மனு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஈரோடு வந்திருந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தொகுதிக்கான கோரிக்கை மனு கொடுத்தார். அருகில் அமைச்சர் சு. முத்துசாமி உள்ளார்.

முதல்வரிடம் மரியாதை சந்திப்பு

அரசு நல திட்டங்கள் துவக்க விழா மற்றும் நலவித்த உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு வந்திருந்த, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து புத்தகம் பரிசளித்தார்.

முதல்வருடன் விசிக நிர்வாகி சந்திப்பு

நேற்று முன்தினம் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வருகை தந்திருந்த, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை, விசிக நிர்வாகி கமலநாதன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.