June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

அமைச்சர் சி. விஜயலட்சுமி ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கினார்… பள்ளிபாளையம். ஜூன்.06 பள்ளிபாளையம் அருகே காவேரி ஆற்றில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள் விழா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு...

தி.மு.க.வில் சாதிய பாகுபாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் -தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜா பரபரப்பு பேட்டி:-:-தேனி. ஜூன்.05-தேனி தெற்கு மாவட்ட திமுகவில் சாதிய பாகுபாடு உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் பொழுது பேட்டியளித்தார்.தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் ஸ்டீபன் ராஜா.இவர் 2009-ல் திருச்சியில் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் திருச்சி புத்தூர் வட்ட செயலாளர் மரக்கடை பாபு முன்னிலையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.தொடர்ந்து இளம் வயதிலிருந்து கட்சியில் களப்பணியாற்றி பின்பு 2017ல் கோம்பை பேரூராட்சி வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் ஆனார்.அதனை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் கட்சி பணியினை திறம்பட ஆற்றியதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இவரை தேனி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக நேரடியாக நியமித்தார்.தொடர்ந்து 17 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக கட்சிப் பணி சமுதாயப் பணியாற்றி வருகிறார். தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜா தனது பேட்டியின் போது கூறியதாவது:தற்போது தேனி தெற்கு மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது தொடர்ந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களையும் கட்சித் தோழர்களையும் மற்ற ஆதிக்க சாதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் கம்பம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை தழுவியதற்கு இதுதான் காரணம் எனவும், எனவே ஆதிதிராவிடர் சொந்தங்கள் இளைஞர்கள் யாரும் திமுகவிற்கு வர வேண்டாம்.திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆதிதிராவிடர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதாகவும்,தேனி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரை சந்திப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தேனி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மீது தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும்,ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவருமான ஸ்டீபன் ராஜா குற்றம் சாட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்,இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துரித நடவடிக்கையின் மூலம் சாதிய பாகுபாடு காட்டும் நிர்வாகிகளை களையெடுக்கவேண்டும்.சமூக நீதி காப்போம் என கூறும் திமுகவில் சாதிய தீண்டாமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாககவும் கட்சியில் தொடர்வது பற்றி ஆதிதிராவிடர் மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது எனவும், வரும் காலங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற,சட்டமன்ற தேர்தல்களில் தேனி தெற்கு மாவட்ட திமுகவில் ஜாதியை பாகுபாடுகளை களைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்றும் தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜா பரபரப்பாக பேசினார்.

ஈரோடு ஜீவானந்தம் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.. ஈரோடு. ஜூன்....