முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி,மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்பு
திருச்சி ஜூலை 21-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்
காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும்,
தமிழத்துக்கு தரவேண்டிய ஜூன் முதல் ஜூலை வரை 53 டிஎம்சி தண்ணீரை இன்று வரை திறக்காததை கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை பாலைவனமாக்க
முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று போராட்டம் நடைபெற்றது. முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் இறங்கி தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஆற்றுக்குள் இறங்கியும்,மண்ணில் புதைந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழுத்தளவு தண்ணீரில் அவர்கள் இறங்கி போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தப் போராட்டத்தால் முக்கொம்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!