June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சேவைச் சாலை அல்லது சுரங்கப்பாதை அமைக்கக் கோரி மக்கள் போராட்டம். சேலம் மாநகரின்...
புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம்தடையின்றி கிடைப்பதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அமைப்பாளர்...
புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நடத்தும் மூன்றாவது “புதுச்சேரி பிரீமியர் லீக்” (PPL T20 – 2026)...
தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக...
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக ரா.கதிரவன் அவர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டார்...

விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது அவதூறு தகவல் வெளியிட்ட சம்பவம்… நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் விசி க வினர் புகார் மனு. ஈரோடு. மே 16 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல. திருமாவளவன் மீது பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் அவதூறு தகவலை பரப்பியதாக அவர் மீது ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் வீசி, க வினர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் தோல். திருமாவளவன். கடந்த பல ஆண்டு காலமாக திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.. திருமாவளவன் பல்வேறு சமூக, சமுதாய பிரச்சனைகளில் முன் நின்று பாதிக்கப்படும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் இரண்டு தொகுதிகளில் இவர் சார்பில் நிறுத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.. திருமாவளவன் மீது, திருநெல்வேலியை சேர்ந்த சோனா என்ற பெண்மணி சமூக வலைதளங்களில் ஜாதி ரீதியான அவதூறு தகவல்களை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட விசிக தலைவர் தன. விஜயன் தலைமையில், மாவட்ட மகளிர் விடுதலை இயக்கத்தின் செயலாளர் புஷ்பலதா(எ) தமிழினி புகார் மனு கொடுத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஆதி வள்ளுவன், சதீஷ் வள்ளுவன், கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் முருகேஷ், மோகனசுந்தரம் இளஞ்சிறுத்தை எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பேச்சாளர் இளையராஜா, மாவட்ட மகளிர் அணி துணை புனிதா, சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி 22வது ஆண்டு விழா லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ்...