June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

வில்லியனூர் தட்டாஞ்சாவடி கிராமத்தில்ரூ. 56 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. தட்டாஞ்சாவடி கிராமத்திற்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு ரூ. 35,93,299/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் ரங்கசாமி நகருக்கு ரூ. 19,74,637/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 55,67,936/– லட்சம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, ஒப்பந்ததாரர் சந்தோஷ்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சரவணன், ராமதாஸ், முத்து, அன்பு, ரவி, பன்னீர்செல்வம், கோதண்டம், ஏழுமலை, கண்ணன், கருணாகரன், தனபால், சேகர், செல்வம், வீரா, ஆதிலட்சுமி, அப்துல் லத்தீப், பிரபு, ரொசாரியோ, கண்ணபிரான், சிவா, சரவணன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால் ஹலீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாலிது, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆறுமுகம் என்கிற செல்வநாதன், தொமுச அங்காளன், மாநில துணை அமைப்பாளர்கள் காளி, காசிநாதன், கோபி, மாநில துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளைக் கழக நிர்வாகிகள் ராஜீ, சபரிநாதன், எம்.எஸ். முரளி, ஜனார்த்தனன், சரவணன், ரபீக், கமால்பாஷா, மிலிட்டரி முருகன், பாண்டியன், கார்த்திகேயன், ராஜேந்திரன், பாலமுருகன், கோவிந்தராஜ், ரவி, மணி, கலைமணி, ராமஜெயம், சோமு, சேகர், சிலம்பு, சர்புதீன், ஜெயபால்ராஜ், அரிசுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:ஜனவரி-23 திருப்பூர் வடக்கு மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட்மாவட்ட செயற்குழு மற்றும் தொகுதி...
ஜன. 23 மதுராந்தகம் பொதுக்கூட்டம் பிற்பகல் 2.15: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு...
கோவை: ஜன-23 கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிஎஸ்ஜிஆர்கேசி முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில்...
​நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்எய்யில் கிராமத்தில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப்மற்றும் மேல்மலையனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழிராஜதத்தன், முதலாம்...
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வில்லியனூர் பாண்டியன் நகர் கிளைக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் பகுதியில் தார்ச்சாலை...

ஈரோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை ஈரோடு ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய அடையாள...

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர்கள், இன்று (ஜனவரி 20) காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். கடந்த 2023-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் மற்றும் ரூ. 10,500 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, போராட்டக்காரர்கள் அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டசபையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.காவல்துறை நடவடிக்கை:போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மறுத்த நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...
​புதுச்சேரி: மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அம்மா...