கிருஷ்ணகிரி |
ஏப்ரல் 10, 2026:
தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி, ஜெசிஜ கிருஷ்ணகிரி, உமாராணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் கலை கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ஒரு பிரம்மாண்ட கின்னஸ் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டன.
சாதனை விபரம்:
இந்த நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, சரியாக 6 வினாடிகளில் “என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகத்தை ஒரே நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்தனர். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முன்னிலை வகித்தவர்கள்:
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி உயர்திரு. ச. தினேஷ் குமார், அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை முயற்சியைத் தொடங்கி வைத்தார். டி ஆர் டி ஏ இணை இயக்குநர் உயர்திருமதி. K. கவிதா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.

தலைமை:
இந்தச் சாதனை விழாவிற்கு ஜேசிஐ கிருஷ்ணகிரி தலைவர் ஜெ எப் பி கோகுல் சின்னசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் S. கீதா, மற்றும் உமாராணி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பி கெ சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ சி எஸ் முயீஸ் பாஷா மற்றும் கந்தன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த இந்த வரலாற்று நிகழ்வு கிருஷ்ணகிரி மண்ணில் பெரும் முத்திரையைப் பதித்துள்ளது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!