ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வழங்கினார்..
ஈரோடு. ஜூன் 14
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமலும், அங்குள்ள மாணவர்கள் கல்விக்கான தேவைகள் கிடைக்காமலும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதனை அறிந்த ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் மூலமாக அனுமதி பெற்று கடம்பூர் மலைப்பகுதிக்கு சென்று அங்கு வசித்து வரும் மலை கிராம பழங்குடியினர் இன மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர்களுக்கான உதவியும் அங்குள்ள ஏழை பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மோகன், வானதி, கீர்த்தனா, நந்தினி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் உதவிகள் வழங்க உதவி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் இன மக்களும், மாணவ மாணவிகளும் தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப்புக்கும், அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

More Stories
ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை