ஈரோடு. ஜூன். 14
மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாம், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் மாண்புமிகு ஈரோடு மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் ஆணையின்படியும், மாண்புமிகு ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், எழுமாத்தூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரிலும் நடைபெற்றது.
இம்முகாமில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் அவர்கள் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும், மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கப்பெண் படையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாற்றினர்.
எழுமாத்தூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் அவர்கள் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். மேலும், தேவையான உதவிகளை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்புகொண்டு பெறலாம் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவிகள் தங்களது சந்தேகங்களை நீதிபதி அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுப் பயனடைந்தனர்.
இறுதியாக, பிஎல்வி திருமதி சாந்தாதேவி அவர்கள் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நன்றியுரை ஆற்றினார்.

More Stories
ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை