புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் திரு. வி.பி. ராமலிங்கம் அவர்கள் தலைமையில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் 12 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துமாறு மாநிலத் தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் திரு. ஏம்பலம் செல்வம், நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் திரு. அசோக் பாபு, திருமதி ஜெயலட்சுமி, திரு. புகழேந்தி, திரு. செந்தாமரைக்கண்ணன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. மோகன்குமார், திரு. லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள், திரு. ஜெயக்குமார், திரு. தமிழ்மாறன், மாவட்டத் தலைவர்கள் திரு. உலகநாதன், திரு. கிருஷ்ணராஜ், திருமதி அனிதா, திரு. சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு